முதுநிலை பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கலந்தாய்வுக் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
M.E, M.Tech, M.Plan, M.Arch போன்ற படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினர், இதர பிரிவு மாணவர்கள் என அனைவரும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.