வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் வலுவான காற்றின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பிற்பகல் முதல் தொடந்து மழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில வாரங்களாக சென்னையில் பனியும், வறண்ட வானிலையும் நிலவிய இன்று திடீரென கனமழை பெய்தது.
சென்னையில் பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பகுதிகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில், மழையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
கொட்டித்தீர்த்த தொடர் மழை காரணமாக சிந்தாதிரிபேட்டையில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது.
கனமழை காரணமாக தியாகராயர் நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தன்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலையில் நிரம்பிய தண்ணீரால் பழுதடைந்த வாகனங்களைத் மக்கள் தள்ளிச் செல்லும் நிலை எற்பட்டது.
தொடர்மழையால் சென்னையில் அதிகளவில் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து பாரிமுனை அருகே உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி வழியாக வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
சென்னையில் பிற்பகல் முதல் பெய்த திடீரென கனமழை பெய்ததன் காரணமாக ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர்.
கொட்டித்தீர்த்த தொடர் மழை காரணமாக சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உணவகங்கங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
திருவொற்றியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்த நிழற்குடைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
பிற்கபல் முதல் பெய்த கன மழையால், தண்ணீர் தேங்கியதை அடுத்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
சென்னை சேத்துப்பட்டு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், மெக்நிக்கல்ஸ் சாலை சிக்னலில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.
சென்னையில் தொடர்ந்து பல மணி நேரமாக பெய்த கனமழையால், வாடகை கார்கள், ஆட்டோக்களின் கட்டணம் திடீரென உயர்ந்தது. பல இடங்களில் வாடகை கார்களும் ஆட்டோக்களும் கிடைக்காத நிலை உருவாகின.