சென்னையில் தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது.
டிஎம்எஸ் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருந்ததால் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியாத சூழல் நீடித்தது.
பெங்களூரு மற்றும் புனே உள்ளிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டதால் தாமதமாக வெளியாகியது.
இந்நிலையில் தமிழக அரசின் வலியுறுத்தலை அடுத்து, மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பு சார்பில் ஆய்வகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இனி உருமாறிய ஒமைக்ரான் கொரோனோ வைரஸ் பாதிப்புகளை தமிழகத்திலேயே கண்டறிந்து உடனுக்குடன் முடிவுகளை வெளியிட முடியும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.