நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டான்.
அரசு உதவி பெறும் சமாரியா மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவன் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தான். 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கூறி, அவர்களின் செல்போன் எண்களை வாங்கியவன், அவர்களில் ஒரு மாணவியிடம் ஆபாசமாக வாட்சப் சேட்டிங்கில் ஈடுபட்டுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார்.
அவர்களும் தங்களிடம் தலைமையாசிரியர் பழக முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர் இதனால் அதிர்ந்து போன மாணவி, பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்த நிலையில், காவல் நிலையத்திலும் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள கிறிஸ்டோபர் ஜெபக்குமாருக்கு ஒரு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.