பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மொத்தமாக பெறப்பட்ட 48, 84,726 நகைக்கடன்கள் விபரங்களை பகுப்பாய்வு செய்ததில் 35லட்சத்து37ஆயிரத்து நகைக்கடன்கள் தள்ளுபடிக்கான சலுகையை பெற்றிருக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியோர், 40கிராமுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், அனைத்து அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு இந்த நகைக்கடன் தள்ளுபடி செல்லுபடியாகது.
மேலும் எந்த ஒரு பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.