ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் தமிழ்நாடு பொது நூல்களுக்கான ஒருங்கிணைந்த நூற்பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இவ்வாறு கூறினார்.