சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் இடிந்து விழுந்த நிலையில், குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 62 திட்டப் பணிகள் மூலம் 17,734 குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலையில், அதனை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும். இக்குழுக்கள் வரும் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.