பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊர் ஊராக வாகனங்களில் சென்று கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழும்பூர் கண் மருத்துவமனையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் குடிசைப் பகுதிகளில் 33 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாகவும், 100 சதவீதம் பேர் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றார். தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரானுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும், அவர்களின் மாதிரிகள் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர், அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.