நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை காந்திமதிக்காக பிரத்யேகமாக 1.5லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில் யானைகள் குளிக்க வசதியாக கோயில் உள்ள பகுதியில் நீச்சல் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில் காந்திமதி யானை எளிதில் இறங்கி குளிக்கும் வகையில் சாய்தள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.