கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் போக்குவரத்துக் காவலரை போதை ஆசாமி ஒருவன் ஆபாசமாகப் பேசி மிரட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் போலீசார், அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் ஒரே பைக்கில் வந்த 3 பேரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
அவர்கள் நிற்காமல் சென்றதால், பின்னால் அமர்ந்திருந்தவனைப் பிடிக்க முயன்றபோது, அவனது சட்டை பட்டன் அறுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, நான் யார் தெரியுமா ? என் சட்டையையே பிடிக்கிறாயா ? உடனே புது சட்டை வாங்கித் தா என்று ஆபாசமாகப் பேசி காவலரிடம் எகிறினான்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.