கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மூடிக் கிடக்கும் கிழக்கு வாசலை திறக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் கோவில்களில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தற்போது எவ்வளவோ தொழில் நுட்பம் வந்து விட்ட பிறகும் கோயிலின் கிழக்கு வாசல் கதவு இன்று வரை மூடியே இருக்கிறது என்றார்.
இந்த வாசலை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் அதை முறையாக கண்காணித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறோம் என்றார்.