தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சின்னமனூரில் இருந்து வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்ற மினி லாரி, திடீரென பின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
லேசான காயங்களுடன் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மினி லாரியில் ஒன்றரை டன் மட்டுமே பாரம் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று டன்னுக்கும் அதிகமாக பாரம் ஏற்றப்பட்டதால் டயர் வெடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.