17ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, சென்னை, நாகை, குமரி, தூத்துக்குடியில் இறந்தவர்கள் நினைவாக பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பட்டினப்பாகத்தில் கடலில் பாலை ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மாவட்ட ஆட்சியர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.நாகையிலும் சுனாமியில் சிக்கி உயிரிழந்த ஆயிரத்திற்கும் மேற்படோரை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் சிறப்பு பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
கடலூரில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது சில பெண்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.தூத்துக்குடியில் சுனாமியில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.