நீலகிரி மாவட்டம் உதகை அருகே சேவல் ஒன்றின் கொண்டையைத் தொட முயற்சிக்கும் மூன்று குரங்கு குட்டிகளின் சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லட்டி மலைப்பாதையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், தனது கொண்டையைத் தொட வரும் 3 குரங்கு குட்டிகளுடன் சேவலும் சரிக்கு சமமாக நின்று போக்கு காட்டியது. சிறிது நேரத்திற்குப் பின் திசைக்கு ஒன்றாக குரங்களும் சேவலும் சென்றுவிட்டன.
தங்களது பார்வையில் வித்தியாசமாக ஏதேனும் தென்பட்டால் ஆபத்தை உணராமல் அதனைத் தொட்டுப் பார்க்கும் குழந்தைகளைப் போன்று குரங்குக் குட்டிகளின் இந்த வீடியோ உள்ளது.