கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வந்த விஜய் ஆனந்த் என்பவன், மாணவிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் ஆன்லைன் வகுப்பின்போது மேல் சட்டை இன்றி பங்கேற்றதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
பள்ளி முதல்வரிடம் புகாரளித்தும் விஜய் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விஜய் ஆனந்த்தை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில், மாணவிகளிடம் இருந்து புகாரைப் பெற்ற மகளிர் காவல் நிலைய போலீசார், விஜய் ஆனந்த்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.