நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ளுவதே முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்த கடைகளை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில், டிரோன் மூலம் ஆக்கிரமிப்புகளை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கண்டிப்புடன் கூறினர்.
இந்நிலையில், வழக்கை, மீண்டும் விசாரிக்க கோரிய மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்த நீதிபதிகள், அதனை சேலம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், திருவேற்காட்டில் பசு மடத்துக்கும் பகிர்ந்து வழங்க உத்தரவிட்டனர்.