கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட நகைகள் வரும் திங்கள்கிழமை முதல் திருப்பித் தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை தணிக்கை செய்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.