பணி செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினாலும், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கமுதி மாவட்ட நீதிமன்றத்தில் பெண் ஊழியருக்கு, வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அதில், நீதிமன்றத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியரிடம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் போதையில் தவறாக நடக்க முயன்றது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும், முனியசாமி மீதான புகார் நிரூபிக்கப்பட்டதால், மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது என தெரிவித்துள்ள நீதிபதி, வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி, தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.