திருச்சியை சேர்ந்த அகோரி ஒருவர் காசி கங்கை கரையில் உள்ள மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்தி உள்ளார்.
காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவிலில் காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மார்கழி மாத மண்டல பூஜைக்காக காசிக்கு சென்ற அகோரி மணிகண்டன், சக அகோரிகளுடன் கங்கைக்கரையில் உள்ள மயானத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார்.
இந்த யாகபூஜையானது காளிக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜை எனவும், இதன் மூலம் இறந்தவரின் உடலில் இருக்கும் ஆன்மா சாந்தி அடையும் என்றும் அகோரிகள் தெரிவித்தனர்.