வேலூர் அருகே பிற்பகல் 3.14 மணியளவில், லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு - வடமேற்கு திசையில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.