காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தண்டலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக மருத்துகல்லூரி நிர்வாகி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமாரை அனுகியுள்ளார்.
அப்போது குமார், வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணகுமாருக்கு பணம் வழங்க வேண்டும் ஆகையால் தடையில்லா சான்று வழங்க 3 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.