வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் பண மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யபட்ட நிலையில், அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க காவல்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.