சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே போதை தலைக்கேறியதில் பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் தின்னரைக் குடித்த கூலித் தொழிலாளிகள் இருவர் உயிரிழந்தனர்.
கொளத்தூர் தன்டா பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மாதப்பன் மற்றும் அவரது உறவினர் பேரன் ஆகியோர் நேற்றிரவு மது அருந்தியுள்ளனர்.
அப்போது, இருவருக்கும் போதை அதிகரித்த நிலையில் மது தீர்ந்து போனதால் அருகிலிருந்த பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் தின்னரை குடித்ததாக கூறப்படுகிறது. இதில், இருவரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.