புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் காலண்டர்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டைகட்டிங் காலண்டர், எம்போஸ் காலண்டர் உள்ளிட்ட பல வகையான காலண்டர்களும் தேசிய தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகவர்கள், சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் படங்களுடன் கூடிய காலண்டர்களும் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழர்கள் வாழும் சிங்கப்பூர், மலேசியா , துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் இங்கிருந்து காலண்டர்கள் அனுப்பப்படுகிறது. இதற்கிடையில் காலண்டர்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், விலையையும் 30 முதல் 40 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.