செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் அருகே, வேலை வாங்கித் தருவதாக கூறி 30 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உட்பட 3 கைது செய்யப்பட்டனர்.
அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கௌரி சங்கரா, தொழில் வாய்ப்பு உருவாக்கித் தரும் நிறுவனமும் ஒன்றையும், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், வேலை வாங்கித் தருவதாக கூறி, பல நபர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, ஏமாற்றியதாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர், சென்னை பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கௌரிசங்கரா-வை கைது செய்து அவருக்கு உதவியதாக சுரேந்தர் மற்றும் லட்சுமி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.