கோவை மாவட்டம் பொள்ளாசி அருகே கோதவாடி குளத்தைப் பார்வையிடச் சென்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக நீரின்றி இருந்த அந்த குளம் பல்வேறு அமைப்பினரால் தூர்வாரப்பட்டதாகும். அண்மையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டதால் அந்த குளம் நிரம்பியுள்ளது.
இதை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்ச்சி நடந்த நிலையில், அதில் பங்கேற்று குளத்தை பார்வையிட வந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாங்கள் தூர்வாரியதால் தான் குளம் நிரம்பியதாக தெரிவித்த அவர்கள், குளத்தை பார்வையிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுக - அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியபோது பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.