இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதுடன், மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 75 மீன்பிடி படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் திமுக எம்பிக்கள் நேரில் வழங்கினர்.
இதே போல் மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெய்சங்கருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும் கடிதம் எழுதியுள்ளார்.