குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 4 நாட்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர் காசர்கோட்டில் உள்ள கேரள மத்திய கல்லூரியின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பின்னர் கொச்சியில் தெற்கு கடற்படை செயல்பாட்டுகளை பார்வையிடும் அவர் டிசம்பர் 23 அன்று திருவனந்தபுரத்தில் பி.என்.பணிக்கரின் சிலையை திறந்து வைக்க உள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.