மதுரையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 200 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கல்மேடு பகுதியிலுள்ள அரிசி ஆலைக்கு அருகே உள்ள குடோனில் ரேசன் அரிசி டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த 7 லாரிகளிலும் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 200 டன் மதிப்பிலான ரேசன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், குடோன் பணியாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.