தமிழகத்தில் நிதிச்சுமை இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சியில் நடைபெற்ற நிலையில், மேடையில் அவர் கேக் வெட்டி அருகில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
இதனை அடுத்து பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்றார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பல துறைகளில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய தொடங்கி உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.