திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் பனியினால் கருகும் மலர்ச்செடிகளை பாதுகாக்கும் பொருட்டு, பசுமை போர்வை போர்த்தும் பணியை பூங்கா ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கொடைக்கானல் பகுதியில், இருதினங்களாக பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக, மழைக்காலத்தில் நடப்பட்ட மலர்க்கன்றுகளை காப்பதற்காக இப்பணிகள் பனிக்காலம் முடியும் வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலை நேரத்தில் போர்த்தப்படும் போர்வையானது, காலையில் பனி விலகி வெயில் ஆரம்பித்தவுடன் அகற்றப்படுகிறது.