கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் தமிழக- கேரள காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பிறப்பு நேரங்களில் தமிழக - கேரளா எல்லை பகுதிகளில் இருமாநில போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
அதையொட்டி, நடத்தப்பட்ட சோதனையில், நாகர்கோயில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரளா அரசு பேருந்தில் ஒரு பயணியின் கைப்பையில் 70 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அந்த நபர் சென்னையை சேர்ந்த ஆதம் என்பதும் ஆவணங்களின்றி பணம் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கொண்டுவரப்பட்டது ஹாவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்