பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடி வரும் ஒருவருக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்றும் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.
நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று வழக்குகளை விசாரிக்கிறார். அதற்காக மதுரை வந்தவருக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
அவர்களுக்கு மத்தியில் பேசிய நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை நோக்கித்தான் நீதிமன்ற பணிகள் இருக்க வேண்டும் என்றார்.