செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மதுபான ஆலைகளை நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சதுரங்கப்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 100 லிட்டர் எரிசாராயத்தையும், 4 சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன், சம்மந்தப்பட்ட மணிகண்டன் மற்றும் ஜெயலட்சுமி என இருவரை கைது செய்தனர்.
இதே போல் பூந்தண்டலம் பகுதியில் உள்ள போலி மதுபான ஆலையில் நடத்திய சோதனையில் 560 லிட்டர் எரிசாராயத்தையும் கைப்பற்றிய நிலையில், அது தொடர்பாக சதீஸ் என்பவனையும் கைது செய்தனர்.