காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தங்கும் விடுதியில் தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டதாக கூறி பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக ஏராளமான பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேர் மீது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், அனுமதியின்றி போராட்டம், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார், அவர்களை கைது செய்து காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.