தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மதுரை மாநகரில் 9 வழக்குகளும், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் திருச்சி, சென்னை மாநகர்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 12 வழக்குகள் பதிவானது.
இந்த நிலையில் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி முதலமைச்சர் உத்தரவிட்டதன்படி, இவ்வழக்குகளின் மீது மேல் நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் காவல் துறையினர் கைவிட்டனர்.