ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு மட்டுமின்றி, உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளன
இந்திய விமான நிலைய ஆணையம், மாநில வாரியாக புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகள் அனைவரும், இ-பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு வரும் இதர மாநில பயணியர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விபரங்கள் www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகளை பொறுத்தவரை, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.