சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே வன அதிகாரி பங்களாவில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது பங்களாவில் 3 சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், 2 மரங்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும் வனத்துறை அளித்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை செய்ததில், அந்த இருவர் திருப்பத்தூரை சேர்ந்த ராஜேஷ் மற்றும் மகாலிங்கம் என்பதும், சந்தன மரங்களை வெட்டி சர்ச் அருகே பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
பின்னர் 2பேரையும் போலீசார் கைது செய்து சந்தன மரங்களையும் பறிமுதல் செய்தனர்.