தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், வன்னியர் இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தது.
இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.
அதேநேரத்தில் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி ஏற்கெனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.