கோவை மாவட்டம் வால்பாறை கவர்கல் பகுதியில் கேளையாட்டை சிறுத்தை வேட்டையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கவர்கல் பகுதியில் உள்ள சாலையில் நீண்ட நேரமாக சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக சப்தம் எழுப்பியும் அந்த சிறுத்தை எந்த ஒரு சலனமும் காட்டாமல் அருகே இருந்த புதருக்குள் உற்றுநோக்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் புதருக்குள் பாய்ந்த அந்த சிறுத்தை அங்கு உயிருக்கு பயந்து புதருக்குள் பதுங்கியிருந்த கேளையாடு ஒன்றை கழுத்தோடு கவ்விக்கொண்டு மீண்டும் சாலைக்கு வந்தது. வாகன ஓட்டி ஒருவர் எடுத்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.