அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுரப்பா தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, கலையரசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.
இதையடுத்து, விசாரணை ஆணைய அறிக்கை மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?, முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளை தொடர போகிறீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசின் விளக்கத்தை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.