தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் சர்வதேச தேநீர் தினத்தை ஒட்டி, 20 நடமாடும் தேநீர் கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், தரமான, கலப்படமற்ற தேநீர் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையிலும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் 10 கடைகளும், திருப்பூர், ஈரோட்டில் தலா மூன்று கடைகளும், கோவையில் 4 கடைகளும் என முதற்கட்டமாக 20 நடமாடும் டீ விற்பனை கடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த நடமாடும் கடைகளில் தேநீரோடு சேர்த்து, பிஸ்கட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஐந்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.