கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கனரா வங்கியில் போலி ரசீது மூலம் பொதுமக்களின் பணத்தை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்களூர் கனரா வங்கியில் நமச்சிவாயம் என்பவர் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மகன் சங்கரனும் அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பொதுமக்கள் இந்த வங்கியில் நகைகளை அடமானம் வைக்கும் போது வெள்ளை ரசீதுக்கு பதிலாக மஞ்சள் ரசீதை நமச்சிவாயம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை ரசீது கேட்டு பொதுமக்கள் நெருக்கடி கொடுத்ததால் தந்தை, மகன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
விசாரணையில் இருவரும் லட்சக்கணக்கில் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.