தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வு வரும் மார்ச் மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், 3 ஆயிரத்து 800 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து 66 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட உள்ள முதன்மை தேர்வு தொடர்பாக விவரங்களை தங்களது இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.