தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாகப் பயன்படுத்தியதாக மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மீது கடந்த 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழக டிஜிபி-யை 5ஆவது எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.பி.,-க்கள், அமைச்சர்கள், நீதிபதிகளாக இருந்த சிலர் ஓய்வுபெற்ற பின்னரும் அரசின் சின்னங்களை பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்தார்.
சட்டவிதிமீறல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்றார்.