நாமக்கல், கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வான் வெளியில் திடீரென கேட்ட பலத்த பேரொலியால் அச்சமடைந்ததாக மக்கள் கூறியுள்ளனர்.
காலை சுமார் 11 மணியளவில் இந்த சப்தம் கேட்டதாகக் கூறப்படும் நிலையில், அச்சமடைந்த மக்கள் வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஓராண்டில் சுமார் 15 முறை இதுபோன்ற பலத்த சப்தம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு, சூலூர் போன்ற விமானப் படை தளங்களைச் சேர்ந்த போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடும்போது காற்று வெளியில் உள்ள வெற்றிடத்தால் இதுபோன்ற சப்தம் ஏற்படுவதாகவும், நில அதிர்வு ஏற்படவில்லை என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.