ஜம்மு காஷ்மீரில் போலீசாரின் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்துள்ளார்.
ஸ்ரீநகர் அருகே போலீசாரின் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக கூறியுள்ளார்.