திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு கோவிலுக்கு சென்ற நிலையில், கோவிலில் இருந்த விருந்தினர் மாளிகையில் தங்கி இன்று காலை தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கோவில் உள்துறை அலுவலகத்தில் வைத்து அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆளுநரின் வருகையை முன்னிட்டு கோவிலில் அதிகாலை 5 மணி முதல் 7.15 வரை விஐபி தரிசனத்திற்கும் பொது தரிசனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.