மதுரையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் உலக அளவில் முதன்முறையாக டோக்வாண்டோவின் ஜம்பிங் பேக் கிக் என்ற முறையில் 11 கான்கீரிட் கற்களை 30 வினாடிகளில் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவரான விஜய் நாராயணன், தனது 23 வயதிலிருந்து டோக்வாண்டோ கலையை கற்று, கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக டோக்வாண்டோவில் 24 வகையான கின்னஸ் சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
தாவி திரும்பி கற்களை உடைத்த அவரது 25வது கின்னஸ் சாதனையை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.