சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மண் சரிவு காரணமாக கிணற்றை ஒட்டியவாறு இருந்த மோட்டார் அறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில், மாயமான பெண்ணை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் சடலமாக மீட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற அஞ்சலை அந்த பெண் இரவு வரை வீடு திரும்பாத நிலையில், வயலுக்கு சென்று பார்த்த போது, மோட்டார் அறை இடிந்து, கிணற்றுக்குள் விழுந்திருந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண்ணின் சடலத்தை மீட்டனர்.